அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கதின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர்.