நெகேமியா 4:1-6 - WCV
1
நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான்.
2
தன் தோழர்கள் முன்னிலையிலும், சமாரியப் படையின் முன்னிலையிலும், “இந்த அற்ப யூதர்கள் என்ன செய்யமுடியும்? அவர்கள் சும்மா விடப்படுவார்களா? அவர்களால் பலி செலுத்த முடியுமா? ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா? எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா?” என்று எள்ளி நகையாடினான்.
3
அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா “ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்: ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும்” என்று ஏளனம் செய்தான்.
4
“எம் கடவுளே! நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும்! இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அன்னியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும்.
5
அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள்.
6
இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.