43
அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.
44
கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.
45
தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.
46
ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.