15
சாலமோன் அரசர் பொன் தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தார்: ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏழு கிலோகிராம் பொன் பயன்படுத்தப்பட்டது.
16
அதே போன்று அவர் முந்நூறு சிறிய கேடயங்களைப் பொன் தகட்டால் செய்தார்: ஒவ்வொரு கேடயத்திற்கும் மூன்றரை கிலோ கிராம் பொன் பயன்படுத்தப்பட்டது. அரசர் இவற்றை‘லெபனோனின் வனம் ‘ என்ற அரச மாளிகையில் வைத்தார்.
17
பின்பு அரசர் தந்தத்தால் பெரியதோர் அரியணை செய்து, அதனைப் பசும் பொன்னால் மூடினார்.
18
அந்த அரியணைக்குப் பொன்னாலான ஆறுபடிகளும், பொன்னாலான ஒரு கால்மணையும் மற்றும் இருக்கையின் இருமருங்கிலும் கைத்தாங்கிகளும் அக்கைத்தாங்கிகளோடு இணைந்த இருசிங்கங்களும் இருந்தன.
19
அந்த ஆறுபடிகளின் இருமருங்கிலுமாகப் பன்னிரு சிங்கங்கள் நின்றன: இது போன்று வேறு எந்த அரசிலும் செய்யப்படவில்லை.
20
அரசர் சாலமோனின் பானபாத்திரங்கள் அனைத்தும் பொன்னாலானவை:‘லெபனோன் வனத்தில் ‘ இருந்த எல்லாக் கலன்களும் பசும் பொன்னால் ஆனவை. சாலமோனின் காலத்தில் வெள்ளிக்கு எத்தகைய மதிப்பும் இல்லை.
21
அரசரின் கப்பல்கள் இராமின் பணியாளருடன் தர்சீசுக்குச் சென்று வரும்: மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தர்சீசிலிருந்து கப்பல்கள் பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.