2நாளாகமம் 32:1-6 - WCV
1
இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிற்கு எதிராகப் படையெடுத்து அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றுமாறு, அவற்றினை முற்றுகையிட்டான்.
2
சனகெரிபு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்திருப்பதை எசேக்கியா கண்டபோது,
3
நகருக்கு வெளியே இருந்த நீருற்றுகளை அடைப்பது பற்றித் தம் தலைவர்களோடும் வலிமை மிகு வீரர்களோடும் கலந்தாய்ந்தார்: அவர்களும் அதனை ஆதரித்தனர்.
4
‘அசீரிய மன்னர்கள் வந்து இவ்வளவு தண்ணீரை ஏன் காண வேண்டும்? ‘ என்று கூறி, மக்களில் பலர் ஒன்றுதிரண்டு நாட்டின் எல்லா நீருற்றுகளையும் ஓடைகளையும் அடைத்து விட்டனர்.
5
அவர் பெருமுயற்சி செய்து, இடிந்துபோன மதில்களை மீண்டும் கட்டி, அவற்றில் காவல் மாடங்களை எழுப்பினார்: தாவீது நகரில் மில்லோ என்ற கோட்டையை வலுப்படுத்தினார்: அத்துடன் திரளான படைக்கலன்களையும் கேடயங்களையும் தயாரித்தார்.
6
பின்பு படைத்தலைவர்களை மக்களின் தளபதிகளாக நியமித்து, அவர்களை நகர்வாயிலின் திறந்த முற்றத்தில் ஒன்று திரட்டினார். பின்பு, அவர்களை நோக்கி,