அங்கே ஓதேது என்பவர் ஆண்டவரின் இறைவாக்கினராக இருந்தார். சமாரியாவுக்குள் வந்திருந்த போர்ப்படைக்கு முன் அவர் சென்று, அவர்களை நோக்கி,‘இதோ உங்கள் மூதாதையர்களின் கடவுளான ஆண்டவர் யூதாவின் மேல் சினம்கொண்டு, அவர்களை உங்களது கையில் ஒப்படைத்தார். நீங்களோ அவர்களை வெஞ்சினத்தோடு கொன்றீர்கள். அது வான்மட்டும் எட்டியுள்ளது.