2நாளாகமம் 28:23-25 - WCV
23
தன்னைத் தோற்கடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்குப் பலி செலுத்தினான்.‘சிரிய மன்னர்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கின்றன: எனக்கும் அவை துணை செய்யுமாறு அவற்றிற்குப் பலி செலுத்துவேன் ‘ என்று சொல்லிக்கொண்டான். ஆனால், அவனது செயல் அவனுக்கும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழிவையே தேடித் தந்தது.
24
ஆகாசு கடவுளின் இல்லத்திலிருந்த கலன்களை ஒன்று திரட்டி நொறுக்கினான். பின்னர் ஆண்டவரது இல்லத்தின் கதவுகளை மூடியபின், எருசலேமின் எல்லா மூலைகளிலும் பலிபீடங்களை எழுப்பினான்.
25
பின்பு, ஒவ்வொரு நகரிலும், யூதாவின் நகர்களில்கூட, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபமிடத் தொழுகை மேடுகளை எழுப்பினான். இது அவன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குச் சினமூட்டியது.