2நாளாகமம் 28:1-6 - WCV
1
ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது: எருசலேமில் அவன் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்: அவன் தன் மூதாதை தாவீதைப் போலன்றி ஆண்டவரின் பார்வையில் நேர்மையானதைச் செய்யவில்லை.
2
மாறாக, அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்புச் சிலைகளைச் செய்தான்.
3
அவன் பென்இன்னோம் பள்ளத்தாக்கில் தூபம் காட்டினான்: இஸ்ரயேலரின் முன்னிலையில் ஆண்டவர் விரட்டியிருந்த வேற்றினத்தாரின் அருவருக்கத் தக்க வழக்கத்திற்கேற்பத் தன் புதல்வர்களையே தீயில் எரிக்கவும் செய்தான்.
4
தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், பசுமையான மரங்களின்கீழும் அவன் பலியிடவும் தூபமிடவும் செய்தான்.
5
ஆதலால், ஆகாசின் கடவுளாகிய ஆண்டவர் அவனைச் சிரியாவின் மன்னன் கையில் ஒப்புவித்தார்: சிரியர் அவனை முறியடித்து, அவன் மக்களில் பெருந்திரளைச் சிறைப்பிடித்து, தமஸ்குவுக்கு இட்டுச் சென்றனர். மீண்டும் ஆகாசு இஸ்ரயேலின் அரசன் கையில் ஒப்புவிக்கப்பட்டுப் பெரும் தோல்வியுற்றான்.
6
இரமலியாவின் மகன் பெக்கா ஒரே நாளில் யூதாவின் வலிமைமிகு இலட்சத்து இருபதினாயிரம் பேரைக் கொன்றுகுவித்தான்: ஏனெனில் அவர்கள் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தனர்.