25
உடனே யோசபாத்தும் அவர் மக்களும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிட வந்தனர். அவர்களிடையே பொருள்களும், ஆடைகளும், விலையுயர்ந்த அணிகளும், அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு, மிகுதியாகக் கிடக்கக் கண்டனர். அவை எவ்வளவு மிகுதியாய் இருந்தனவெனில், அவற்றைக் கொள்ளையிட மூன்று நாள்கள் ஆயின.
26
நான்காம் நாள் பெராக்கா பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி, ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர். எனவே இந்நாள் வரை அவ்விடம் 'புகழ்ச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது.
27
பின்னர் யூதா, எருசலேம் ஆள்கள் அனைவரும் யோசபாத்தின் தலைமையில் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினர்: ஏனெனில் ஆண்டவர் அவர்களின் பகைவர்களைமுன்னிட்டு, அவர்களை மகிழ்வுறச் செய்தார்.