10
இராமுக்கு அம்மினதாபு பிறந்தார், அம்மினதாபுக்கு யூதா மக்களின் தலைவராகிய நகசோன் பிறந்தார்.
11
நகசோனுக்கு சல்மா பிறந்தார்: சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.
12
போவாசுக்குப் ஒபேது பிறந்தார்: ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
13
ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எலியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.
14
நான்காம் மகன் நெத்தனியேல், ஐந்தாம் மகன் இரதாய்,
15
ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.