2இராஜாக்கள் 4:32-35 - WCV
32
எலிசா வீட்டினுள் நுழைந்தபோது, இறந்த பிள்ளை தம் படுக்கையில் கிடப்பதைக் கண்டார்.
33
உடனே அவர் உள்ளே சென்று, அவர்கள் இருவரும் வெளியே இருக்க, கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
34
பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும் கண்களோடு கண்களும், கைகளோடு கைகளும் வைத்து பிள்ளையின்மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறியது.
35
பின்பு கீழிறங்கி, அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின்மேல் ஏறி அவன் மீது படுத்துக் கொண்டார். அப்பொழுது பிள்ளை ஏழுமுறை தும்மிய பின் கண் திறந்தது.