2
எலிசா அவரை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல்” என்றார். அதற்கு அவர் உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை” என்றார்.
3
எலிசா, “நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள்.
4
நீ உன் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்துவை” என்றார்.
5
அவ்வாறே, அவரும் தம் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவர்கள் எடுத்துத் தந்த கிண்ணங்களில் அவர் எண்ணெய் ஊற்றினார்.
6
எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின் அவர் தம் மகன் ஒருவனை நோக்கி, “இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா” என்றார். அதற்கு அவன், “வேறு பாத்திரம் இல்லை” என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.