2இராஜாக்கள் 25:23-26 - WCV
23
பாபிலோனிய மன்னன் கெதலியாவை ஆளுநனாக நியமித்த செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் கேள்விப்பட்டனர். எனவே நெத்தனியா மகன் இஸ்மயேல், காரயாகு மகன் யோகனான், நெற்றோபாவைச் சார்ந்த தன்குமத்து மகன் செராயா, மாக்காவைச் சார்ந்த யாசனியா ஆகியோர் தம் ஆள்களுடன் மிஸ்பாவிலிருந்து கெதலியாவிடம் வந்தனர்.
24
கெதலியா அவர்களையும் அவர்களின் ஆள்களையும் நோக்கி, “கல்தேய அலுவலர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். உங்கள் நாட்டில் இருந்துகொண்டே பாபிலோனிய மன்னனுக்குப் பணிவிடை செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது” என்று ஆணையிட்டுக் கூறினான்.
25
ஏழாம் மாதத்தில் அரச குலத்தைச் சார்ந்த எலிசாமாவின் புதல்வனான நெத்தனியா மகன் இஸ்மயேல், பத்து ஆள்களுடன் வந்து கெதலியாவையும், அவனுடன் மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் தாக்கிக் கொன்றான்.
26
அப்பொழுது மக்கள் யாவரும், சிறியோர் முதல் பெரியோர் வரை, கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத்தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.