17
இதோ! நாள்கள் வரும்! அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும், ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.
18
மேலும் நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர்” என்று சொன்னார்.
19
அப்பொழுது எசேக்கியா எசாயாவை நோக்கி, 'ஆண்டவரின் வார்த்தையாக நீர் கூறியது நல்வாக்கே!' என்றார். ஏனெனில் அவர் தம் வாழ்நாள்களில் அமைதியும் பாதுகாப்பும் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.