2இராஜாக்கள் 18:22 - WCV
நீ ஒருவேளை, 'எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்' என்று சொல்லலாம். ஆனால் யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் பார்த்து, 'நீங்கள் எருசலேமிலிருக்கும் இப்பலிபீடத்தில் மட்டும் வழிபடுங்கள்' என்று கட்டளையிட்டபொழுது எசேக்கியாவாகிய நீ அவருடைய தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் அழிக்கவில்லையா?