27
எனவே, அசீரியா மன்னன், “நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும்” என்று கட்டளையிட்டான்.
28
அவ்வாறே, சமாரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குருக்களுள் ஒருவன், பெத்தேலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவருக்கு அஞ்சி வாழும் முறைபற்றிக் கற்றுக்கொடுத்தான்.
29
ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.