2இராஜாக்கள் 16:7-11 - WCV
7
எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி “நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்” என்று சொன்னான்.
8
மேலும் ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.
9
அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.
10
எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், தன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் குரு உரியாவுக்கு அனுப்பி வைத்தான்.
11
அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, குரு உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார்.