பிறகு அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. “பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும்” என்றான்.