எலிசா தம் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து அவனை நோக்கி. “கீழ்ப்பக்கமுள்ள பலகணியைத் திற” என்றார். அவன் அதைத் திறந்தவுடன் எலிசா, “ஓர் அம்பை எய்” என்றார். அவனும் அவ்வாறே எய்தான். அவர், “அது ஆண்டவரது மீட்பின் அம்பு: சிரியர் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அம்பு: நீ அபேக்கில் சிரியரை முற்றிலும் அழிப்பாய்” என்றார்.