5
அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:”நீங்கள் செய்யவேண்டியது இதுவே: நீங்கள் ஓய்வு நாளில் பணியேற்கும் பொழுது, உங்களில் மூன்றில் ஒரு பங்கினர் அரண்மனைக்குக் காவல் இருக்கவேண்டும்.
6
அடுத்த பங்கினர்”சூர்” வாயிலில் காவல் காத்து நிற்க வேண்டும். மூன்றாவது பங்கினர் மற்றைய காவலர்களுக்குப் பின்னால் வாயிலில் காவலிருக்க வேண்டும்.
7
ஓய்வு நாளில் விடுப்பில் செல்லும் இரு குழுக்களும் அரசனை ஆண்டவரின் இல்லத்தில் பாதுகாத்து நிற்கவேண்டும்.