1இராஜாக்கள் 4:21-24 - WCV
21
சாலமோன், யூப்பிரத்தீசு, தொடங்கிப் பெலிஸ்தியரின் நாடு வரையிலும், எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த நாடுகளின் மேலும் ஆட்சி செலுத்தி வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாடுகளின் மக்கள் சாலமோனுக்குக் கப்பம் கட்டி அடிபணிந்திருந்தனர்.
22
சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை: முப்பது கலம் மிருதுவான மாவு: அறுபது கலம் நொய்:
23
கொழுத்த மாடுகள் பத்து: மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகள் இருபது: ஆடுகள் நூறு: கலைமான்கள், சிறுமான்கள், வரையாடுகள், கொழுத்த கோழிகள் ஆகியவை.
24
திப்சாவிலிருந்து காசா வரையிலும் யூப்பரத்தீசின் மேற்குப் புறத்தில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும், அந்த ஆற்றுக்கு மேற்கே இருந்த ஆட்சி செலுத்தி வந்தார். எல்லைப் புறப் பகுதிகள் அனைத்திலும் அமைதி நிலவியது.