1இராஜாக்கள் 4:1-19 - WCV
1
சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் அட்சி செலுத்தி வந்தார்.
2
அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே:
3
குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்: சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்: அகிலூதின் மகன் யோசபாத்து.
4
படைத் தலைவன்: யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்: சாதோக்கு, அபியத்தார்.
5
தலைமைக் கண்காணிப்பாளன்: நாத்தானின் மகன் அசரியா. அரசரின் ஆலோசகன்: நாத்தானின் மகன் குரு சாபூது.
6
அரண்மனை மேற்பார்வையாளன்: அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்: அப்தாவின் மகன் அதோனிராம்.
7
இஸ்ரயேல் நாடெங்கும் சாலமோனின் கீழ் பன்னிரு ஆளுநர் இருந்தனர். அவர்கள் அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் மாதத்திற்கு ஒருவராக ஆண்டு முழுவதும் தேவையான பொருள்களைச் சேகரித்துத் தந்தார்கள்.
8
அவர்களின் பெயர்கள்: பென்கூர்-மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது:
9
பென்தெக்கர்-மாக்காசு, சாயல்பிம், பேத்சமேசு, ஏலோன் பெத்கானான் ஆகிய நகர்கள் இவனுக்கு உரியவை.
10
பென்கெசது-அருபோத்து, சோக்கோவும் ஏபேர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியவை.
11
சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு-நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது.
12
அகிலூதின் மகன் பாகனா-தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மாயமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை.
13
பென்கெபர்-ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்றூர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை.
14
இத்தோவின் மகன் அகினதாபு-மகனயிம் இவனுக்கு உரியது.
15
சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு-நப்தலி இவனுக்கு உயரியது.
16
ஊசாயின் மகன் பாகனா-ஆசேர், பெயலோத்து இவனுக்கு உரியவை.
17
பாருவாகின் மகன் யோசபாத்து-இசக்கார் இவனுக்கு உரியது.
18
ஏலாவின் மகன் சிமயி-பென்யமின் இவனுக்கு உரியது.
19
ஊரியின் மகன் கெபேர்-எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது.