1இராஜாக்கள் 22:3-8 - WCV
3
இஸ்ரயேலின் அரசன் தன் அலுவலரை நோக்கி,“இராமோத்து-கிலயாது நமக்குரியது என்று அறியீர்களோ? ஆயினும் அதைச் சிரியாவின் மன்னனிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏதும் நாம் செய்யாதிருக்கிறோமே? “ என்று கூறியிருந்தான்.
4
எனவே அவன் யோசபாத்திடம்,“இராமோத்து-கிலாயாதோடு போரிட என்னுடன் வருகின்றீரா? “ என்று கேட்டான். அதற்கு யோசபாத்து இஸ்ரயேலின் அரசனை நோக்கி,“உம்மைப் போலவே நானும் தயார்: உம் மக்களைப் போலவே என் மக்களும்: உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும் “ என்றான்.
5
யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி,“ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும் “ என்றான்.
6
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நானூறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி,“நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா? “ என்று கேட்டான். அதற்கு அவர்கள்,“போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார் “ என்றனர்.
7
பின்பு யோசபாத்து,“ஆண்டவரின் திருவாக்கினருள், ஒருவரேனும் இங்கில்லையா? அவரிடமும் இதுபற்றி நாம் கேட்டறியலாமே? “ என்றான்.
8
அப்போது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி,“இம்லாவின் மகன் மீக்காயா என்னும் ஒருவன் இருக்கிறான். அவன்மூலம் ஆண்டவரைக் கேட்டறிந்து கொள்ளலாம். ஆனால் அவனை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைக்கிறான் “ என்றான். அதற்கு யோசபாத்து,“அரசே! நீர் அப்படிச் சொல்ல வேண்டாம் “ என்றான்.