3
“பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்: இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்: அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும் “ என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார்.
4
பெத்தேலில் இருந்த அப்பலிபீடத்துக்கு எதிராக இறையடியார் கூறின சொற்களை அரசன் எரொபவாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி,“அவனைப் பிடியுங்கள் “ என்றான். நீ”ட்டிய கை விறைத்து நின்று விட்டது: அதை அவனால் மடக்க முடியவில்லை.
5
ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க இறையடியார் கொடுத்திருந்த அடையாளத்திற்கேற்ப, பலிபீடம் இடிந்து விழுந்தது: அதன் மேலிருந்த சாம்பலும் கீழே கொட்டியது.