2சாமுவேல் 4:9-12 - WCV
9
பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரோக்காபையும் அவனுடைய சகோதரன் பானாவையும் நோக்கி தாவீது இவ்வாறு கூறினார்கள். அனைத்து துயரங்களினின்றும் என்னை விடுவித்த ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு சொல்கிறேன்.
10
இதோ சவுல் இறந்து விட்டான் என்று எனக்குச் சொல்ல வந்தான், தான் நற்செய்தி கொண்டு வந்தவனாகவே இருந்தான். நானோ அவனை பிடித்துச் சிக்லாவில் கொன்றேன். அவனுக்கு நான் வெகுமதியாகக் தந்தது அதுவே.
11
இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே அவனது படுக்கையிலே கொன்று விட்டார்கள். அவனது இரத்தத்தை சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்துவிடமாட்டேனோ?
12
தாவீது ஆணையிட்டு அவர்தம் பணியாளர் அவர்களை கொன்றனர்: கைகளையும் கால்களையும் வெட்டியபின் அவர்களை எபிரோன் குளத்தருகே தொங்கவிட்டனர்: இஸ்பொசேத்தின் தலையை எடுத்து எபிரோனில் அப்னேரின் கல்லறைக்கு அருகே புதைத்தனர்.