2
ஆண்டவரின் ஆவி என் மூலம் பேசினார்: அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது.
3
இஸ்ரயேலின் கடவுள் என்னோடு பேசினார்:”இஸ்ரயேலின் பாறை” எனக்கு கூறினார்.
4
விடியற்கால ஒளியென திகழ்கிறான்: முகிலற்ற காலை கதிரவனென ஒளிர்கிறான்: மண்ணின்று புல் முளைக்கச் செய்யும் மழையென விளங்குகிறான்.