30
மெபிபொசேத்து மறுமொழியாக,”இல்லை” அவனே அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்கு போதும்! என்று அரசரிடம் கூறினான்.
31
கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரைஅங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்த்தானைக் கடந்து வந்தார்.
32
பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்: எண்பது வயதினர்: பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்த போது அவரின் தேவைகளைக் கொண்டவர்.
33
அரசர் பர்சில்லாயிடம்”இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிருக்கும். நான் உம் தேவைகளை கவனித்துக் கொள்வேன்”என்றான்.
34
அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது:”அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?
35
இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது: நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?
36
உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?
37
உம் பணியாளனைப் போகவிடு. நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்.
38
அப்பொழுது அரசர்,”கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விருப்பினாலும் நான் உமக்குச் செய்வேன்” என்று கூறினார்.
39
பிறகு, மக்கள் அனைவரும யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோத்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்கு திரும்பினார்.