2சாமுவேல் 19:24-27 - WCV
24
சவுலின் பேரன் மெபிபொசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டு சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களை கழுவவில்லை. தாடியைத் திருத்தவில்லை: தன் ஆடைகளை வெளுக்கவுமில்லை.
25
அவன் எருசலோமில் அரசரை சந்திக்க வந்தபோது, அரசர் அவரை நோக்கி,”மெபிபொசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை? என்று வினாவினார்.
26
அதற்கு என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றி விட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால்,”நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன்” என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.
27
அவனோ உம் அடியனைப் பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால் என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்பட்டதையே செய்யும்.