27
தாவீது மகனயிம் வந்தடைந்த போது அம்மோனியரின் இராபாவிலிருந்து நாகாசின் மகன் சோபியும் லோதபாரிலிருந்து அம்மியேலின் மகன் மாக்கிரும், ரோகிலிமிலிருந்து கிலயாதியன் பர்சில்லாயும்
28
தாவீதிடம் வந்து அவருக்கு படுக்கைகள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள். கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், மொச்சை, அவரை, பயிறு, தேன், தயிர், ஆடுகள், பசும்பாற்கட்டிகள் ஆகியவற்றைக் கொடுத்தார்.
29
பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்க்ள என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்கள் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர்.