20
அப்சலோம் அகிதோபலிடம்,”நான் என்ன செய்யலாம் என்று அறிவுரை கூறு” என்று கேட்டான்.
21
அகிதோபல் அப்சலோமிடம்,”என் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேல் அனைவரும் கேள்விப்படுவர். உன்னொடு இருப்பவர் கை ஓங்கும்” என்றான்.
22
அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அடைக்கப்பட்டது. இஸ்ரயேல் முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.
23
அந்நாளில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காக கருதப்பட்டது. இவ்வாறு தான் தாவீது அப்சலோமும் அகதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.