1
அதற்குப் பின்னர் அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.
2
அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வயலின் பாதை அருகே நிற்பான்: யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்பு கேட்க வந்தால் அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து,”நீ எந்நகரிலிருந்து வருகிறாய்? என்று கேட்பான். அவன்,”உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குடும்பத்திலிருந்து வருகிறேன்”என்று பதில் சொல்வான்.
3
அப்போது அப்சலோம்,”உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால் அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.
4
நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால் வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதிவழங்குவேன்”என்பான்.
5
யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனை முத்தமிடுவான்.
6
அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேல் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டான்.
7
நான்கு ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம்,” நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும்.
8
உமது அடியான் சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்த போது,”ஆண்டவர் எருசலோமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன், என்று ஒரு நேர்ச்சை செய்தேன்” என்றான்.
9
நலமாய்ச் சென்று வா, என்று அரசர் அவனிடம் கூற அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான்.
10
பின் அப்சலோம் இஸ்ரயேல் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார்”என்று முழங்குங்கள் என்று சொல்லியனுப்பினான்.
11
எருசலோமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர். வஞ்சகமின்றி இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமிடம் சென்றார்.
12
அப்சலோம் பலி செலுத்திய போது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோவிலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது: அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.