25
அதற்கு யோசேப்பு பார்வோனை நோக்கி, “பார்வோனாகிய தாங்கள் கண்ட கனவுகள் குறிப்பன ஒன்றே.கடவுள் தாம் செய்யவிருப்பதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
26
ஏழு நல்ல பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.ஏழு நல்ல கதிர்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.ஆக, கனவுகள் குறிப்பன ஒன்றே.
27
அவற்றிற்குப்பின் வந்த மெலிந்த, அருவருப்பான ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.பதராகி வெப்பக் காற்றினால் தீய்ந்துபோன ஏழு கதிர்கள் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
28
நான் பார்வோனாகிய தங்களுக்குச் சொன்னது போலவே, கடவுள் தாம் செய்ய இருப்பதைப் பார்வோனாகிய தங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.