5
ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை.ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான்.அவன் முகம் வாடியது.
6
ஆகவே, ஆண்டவர் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
7
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்.நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார்.
8
காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்”என்றான்.அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.
9
ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?”என்று கேட்டார்.அதற்கு அவன், “எனக்குத் தெரியாது.நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.
10
அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.
11
இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
12
நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்.
13
காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.
14
இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்: உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன்.மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது.என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!”என்றான்.