ஆதியாகமம் 36:9-19 - WCV
9
சேயிர் மலைநாட்டில் வாழும் ஏதோமியரின் மூதாதையாகிய ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
10
ஏசாவின் புதல்வர்கள் பெயர்களாவன: ஏசாவின் மனைவி ஆதாவின் மகன் எலிப்பாசு, அவருடைய இரண்டாம் மனைவியான பாசமத்தின் மகன் இரகுவேல்.
11
எலிப்பாசின் புதல்வர்கள்: தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.
12
ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்.இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.
13
இரகுவேலின் புதல்வர்கள்: நகத்து, செராகு, சம்மா, மிசா.இவர்களே ஏசாவின் மனைவி பாசமத்தின் பேரப்பிள்ளைகள்.
14
சிபயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமா ஏசாவுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள்: எயுசு, யாலாம், கோராகு.
15
ஏசாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்: ஏசாவின் தலைமகன் எலிப்பாசின் புதல்வர்களான தேமான், ஒமார், செப்போ, கெனாசு.
16
கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும் எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
17
ஏசாவின் மகன் இரகுவேலின் புதல்வர்களுள் தலைவர்களாயிருந்தவர்கள்: நகத்து, செராகு, சம்மா, மிசா.இவர்களே இரகுவேலின் புதல்வர்கள், ஏசாவின் மனைவி பாசுமத்தின் பேரப்பிள்ளைகள்.இவர்கள் இரகுவேலின் வழிவந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.
18
ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்: எயுசு, யாலாம், கோராகு.இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.
19
இவர்களே ஏதோம் எனப்பட்ட ஏசாவின் புதல்வர்களும், அந்த இனத்தின் தலைவர்களும் ஆவர்.