18
இவ்வாறு யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபின் கானான் நாட்டைச் சார்ந்த செக்கேம் நகருக்கு நலமுடன் வந்து சேர்ந்தார்.அந்நகருக்கு எதிரே பாளையம் இறங்கினார்.
19
கூடாரமடித்துத் தங்கிய அந்நிலப்பகுதியை செக்கேமின் தந்தை ஆமோரின் புதல்வரிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு அவர் விலைக்கு வாங்கினார்.
20
பின்பு, அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி அதற்கு “ஏல்-எலோகே-இஸ்ரயேல்” என்று பெயரிட்டார்.