ஆதியாகமம் 31:38-40 - WCV
38
இதற்கானத்தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்? உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் சினை அழியவில்லையே! உம்முடையமந்தைக்கிடாய்களில் ஒன்றையும் நான் தின்னவில்லையே!
39
கொடிய விலங்குகளால் அடிபட்டவைகளை நான் உம்மிடம் கொண்டுவரவில்லையே! மாறாக அவற்றிற்கும் ஈடு செய்தேன்.ஆனால் இரவிலோ பகலிலோ களவுபோனவற்றிற்காக நீர் என் கையிலிருந்து ஈடு வாங்கிக்கொண்டீரே!
40
பகலில் கொடும் வெயிலும் இரவில் கடும் குளிரும் என்னை வாட்டின.அதனால் என் கண்களுக்கு உறக்கமே இல்லை.