13
ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.
14
ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்.
15
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.
16
அவர் பெண்ணிடம் “உன் மகப்போற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்: வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய்.ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்: அவனோ உன்னை ஆள்வான்” என்றார்.
17
அவர் மனிதனிடம், “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது: உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.