ஆதியாகமம் 26:2-5 - WCV
2
அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.
3
அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய்.நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன்.இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன்.உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.
4
உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன்.உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன்.உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.
5
ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்” என்றார்.