15
அவர் தந்தை ஆபிரகாமின் காலத்தில் அவருடைய வேலையாள்கள் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்து விட்டனர்.
16
மேலும் அபிமெலக்கு ஈசாக்கை நோக்கி, “நீ எங்களைவிட வலிமையுள்ளவனாய் இருப்பதால், எங்களை விட்டு அகன்று போ” என்றான்.
17
எனவே, ஈசாக்கு அங்கிருந்து வெளியேறிக் கெரார் பள்ளத்தாக்கில் குடியேறி வாழலானார்.
18
அங்கே, தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு, அவர் இறந்த பின் பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை அவர் தோண்டித் தூரெடுத்தார்: தம் தந்தை இட்டிருந்த அதே பெயர்களால் அவற்றை அழைத்தார்.
19
பின் அவருடைய வேலைக்காரர் நீர்ப்படுகையில் தோண்ட, அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டனர்.
20
ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களோடு, “இந்தத் தண்ணீர் எங்களதே” என்று வாதாடினர்.இவ்வாறு அவர்கள் அவரோடு தகராறு செய்ததால் அந்தக் கிணற்றுக்கு அவர்”ஏசேக்கு” என்று பெயரிட்டார்.
21
மீண்டும் அவர்கள் வேறொரு கிணறு தோண்டினர்.முன்புபோல் அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது.எனவே அதற்குச்”சித்னா” என்று அவர் பெயரிட்டார்.
22
அவர் அவ்விடத்தை விட்டகன்று, வேறொரு கிணற்றைத் தோண்டினார்.இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை.அதன் பொருட்டு, “ஆண்டவர் நம் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்.நாட்டில் நாம் வளர்ச்சியுறுவோம்” என்று சொல்லி, அதற்கு”இரகபோத்து” என்று பெயரிட்டார்.