31
அப்பொழுது மூத்தவள் இளையவளை நோக்கி, “நம் தந்தை வயது முதிர்ந்தவர்.உலகெங்கும் உள்ள வழக்கிற்கேற்ப நம்மை மணந்து நம்முடன் உறவு கொள்ளுமாறு இப்பகுதியில் வேறு ஆடவர் எவரும் இல்லை.
32
”வா: நம் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்து, அவருடன் உறவுகொள்வோம். இவ்வாறு நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக் கொள்வோம்” என்றாள்.
33
அவ்வாறே அன்றிரவு தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்கவைத்தார்கள்.பிறகு மூத்தவள் உள்ளே நுழைந்து தன் தந்தையுடன் படுத்துக் கொண்டதோ, அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
34
மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி, “நேற்றிரவு என் தந்தையோடு நான் படுத்துக்கொண்டேன்.இன்றிரவும் அவ்வாறே அவரைத் திராட்சை மது குடிக்கவைப்போம்.நீ சென்று அவருடன் படுத்துக்கொள்.இவ்வண்ணமாக நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக்கொள்வோம்” என்றாள்.
35
அவ்வாறே அன்றிரவும் தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்தார்கள்.இம்முறையும் அவள் படுத்துக்கொண்டதோ அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
36
இவ்வாறு லோத்தின் புதல்வியர் இருவரும் தம் தந்தையின் மூலம் கருத்தரித்தனர்.