பிறகு, “என் தலைவர்களே, அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள்.உங்கள் கால்களைக் கழுவி, இரவு தங்குங்கள்.காலையில் எழுந்து உங்கள் வழிப்பயணத்தைத் தொடருங்கள்” என்று சொன்னார். அவர்களோ, “வேண்டாம், பொதுவிடத்தில் நாங்கள் இரவு தங்குவோம்” என்று மறுமொழி சொன்னார்கள்.