17
அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, “நீ உயிர்தப்புமாறு ஓடிப்போ: திரும்பிப் பார்க்காதே: சமவெளி எங்கேயும் தங்காதே: மலையை நோக்கித் தப்பி ஓடு: இல்லையேல் அழிந்து போவாய்” என்றார்கள்.
18
லோத்து அவர்களை நோக்கி: “என் தலைவர்களே, வேண்டாம்.
19
உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது.என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது.ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது.ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப்போவேன்.
20
எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது.அது சிறியதாய் இருக்கிறது.அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்” என்றார்.
21
அதற்கு தூதர் ஒருவர், “நல்லது, அப்படியே ஆகட்டும்.இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான் அழிக்க மாட்டேன்.