WCV

ஆமோஸ் அத்தியாயம் 1
தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு:
“சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழுங்குகின்றார்: இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன: கர்மேல் மலையின் உச்சியும் காய்ந்து போகின்றது”
ஆண்டவர் கூறுவது இதுவே: தமஸ்கு நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக, நான் கொடுத்த தண்டனைத் திர்ப்பை மாற்றவே மாட்டேன். ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு போராடித்தார்கள்.
ஆதலால் அசாயேல் வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன். அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும்.
தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன். பிக்காத்தாவேனில் குடியிருப்பவர்களையும் பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன். ஆராமின் மக்கள் கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவர் கூறுவது இதுவே: “காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்:
ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.
அஸ்தோதில் குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்: எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்: பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர்” என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர்.
ஆண்டவர் கூறுவுது இதுவே: “தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்: சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.
ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.”
ஆண்டவர் கூறுவது இதுவே: “ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி வாளேந்தித் தன் சகோதரனையே துரத்தினான்: தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் காட்டி வந்தான்:
ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும்.
ஆண்டவர் கூறுவது இதுவே: “அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக் கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழத்தார்கள்.
ஆதலால், இராபாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கி விடும்: அப்பொழுது, போர்க்காலத்தின் பேரிரைச்சலும், சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும்.
அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான். அவனோடு அதிகாரிகளும் கொண்டு போகப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர்.