WCV

எரேமியா அத்தியாயம் 45
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளில் எழுதி வைத்த பின்னர், எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது:
பாரூக்கு! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்:
எனக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஆண்டவர் எனக்குத் துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்: நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப் போனேன். எனக்கு நிம்மதியே கிடையாது என்று நீ சொன்னாய்.
இவ்வாறு நீ அவனிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நான் கட்டியதை நானே அழிப்பேன்: நான் நட்டதை நானே பிடுங்குவேன். இந்நாடு முழுவதற்கும் இவ்வாறு நிகழும்.
நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா? அவ்வாறு தேடாதே: ஏனெனில் எல்லா மனிதர்க்கும் நான் தண்டனை அளிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். ஆனால் நீ எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் நான் உன் உயிரைக் கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.