WCV

ஏசாயா அத்தியாயம் 64
நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!
விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்: வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.
நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்: மலைகள் உம் முன்னே உருகி ஓடின!
தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை.
மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்: இதோ, நீர் சினமடைந்தீர்: நாங்கள் பாவம் செய்தோம்: நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?
நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்: எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின: நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்: எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன.
உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை: உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை: நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்: எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர்.
ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.
ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்: குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்: உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.
உம் புனித நகர்கள் பாலை நிலமாயின: சீயோன் பாழ் நிலமாயிற்று: எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.
எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய தூய்மையும் மாட்சியும் மிக்க எங்கள் திருக்கோவில் நெருப்புக்கு இரையாயிற்று: எங்களுக்கு அருமையானவை அனைத்தும் அழிந்து போயின.
ஆண்டவரே, இவற்றைக் கண்டும் நீர் வாளாவிருப்பீரோ? மவுனமாயிருந்து எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?