WCV

ஏசாயா அத்தியாயம் 12
அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்: “ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்: நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்: இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது: நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
அந்நாளில் நீங்கள் சொல்வதாவது: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்: மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்: அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்: ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்: அனைத்துலகும் அதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.