WCV

நீதிமொழிகள் அத்தியாயம் 20
திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்: போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்: அவற்றில் நாட்டங்கொள்பவர் மடையரே.
அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத்திற்கு நிகர்: அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.
விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனிதருக்கு அழகு: ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாத்ததை விரும்புகின்றனர்.
சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்: அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.
மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது: மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்?
பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்: ஆனால், நம்பிக்கைக்குரியவரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?
எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.
மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்துவிடுவான்.
“என் இதயத்தைக் தூயதாக்கி விட்டேன்: நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையாயிருப்பவன்”என்று யாரால் சொல்லக்கூடும்?
பொய்யான எடைக் கற்களையும் பொய்யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.
சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்: அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.
கேட்கும் காது, காணும் கண்: இவ்விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.
தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே: நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு: உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.
ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்: வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.
பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.
அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்: அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.
வஞ்சித்துப் பெறும் உணவு சுவையாயிருக்கும்: ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.
நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்: சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.
வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்: வாயாடியோடு உறவாடாதே.
தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்துபோகும்.
தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.
“தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே: ஆண்டவரையே நம்பியிரு: அவர் உன்னைக் காப்பார்.
பொய்யான எடைக் கற்களைப் பயன்படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்: போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.
மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்: அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?
எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத்தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணியில் கால் வைப்பதாகும்.
ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்: அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.
ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு: அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.
அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்: அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.
இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை: முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.
நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்: கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்.