WCV

சங்கீதம் அத்தியாயம் 143
ஆண்டவரே! என்மன்றாட்டைக் கேட்டருளும்: நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.
தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்: ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும் உமது திருமுன் நீதிமான் இல்லை.
எதிரி என்னைத் துரத்தினான்: என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்: என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.
எனவே, என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று: என்உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்: உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச் சிந்தனை செய்கின்றேன்: உம் கைவினைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்: வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது. (சேலா)
ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்: ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது: என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்: இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.
உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்: ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்: நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்: ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்: நான்”உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.
உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என்”கடவுள்: உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!
ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு என் உயிரைக் காத்தருளும்! உமது நீதியின் பொருட்டு என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.
உமது பேரன்பை முன்னிட்டு என் பகைவரை அழித்துவிடும்: என் பகைவர் அனைவரையும் ஒழித்துவிடும்: ஏனெனில், நான் உமக்கே அடிமை!