WCV

சங்கீதம் அத்தியாயம் 110
ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.
வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்: உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்: வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.
என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.
வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்பவார்: பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்: ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.