1 | சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார். |
2 | அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்: இளையவனின் பெயர் அபியா: இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர். |
3 | ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசகை”கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை. |
4 | எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர். |
5 | அவர்கள் அவரிடம், “இதோ உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும் “ என்று கேட்டுக் கொண்டார். |
6 | “எங்களுக்கு நீதி வழங்க ஊர் அரசனைத் தாரும் என்று அவர்கள் கேட்டதும் சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார். |
7 | ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டார். |
8 | நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள். |
9 | இப்போது அவர்கள் குரலுக்குச்செவிகொடு. ஆனால் அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து “. |
10 | ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார். |
11 | உங்கள் மீது ஆட்சி செய்யும் உண்மைகளாவன: அவன் உங்கள் புதல்வர்ளை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான்”. |
12 | அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஐம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விளசை”சலை அறுவடை செய்வராகவும், தன் போர்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான். |
13 | மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சடுபவர்களாகவும், வைத்து”க கொள்வான். |
14 | அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலர்களுக்கு கொடுப்பான். |
15 | உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் கொடுப்பான். |
16 | உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான். |
17 | உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளராய் இருப்பீர்கள். |
18 | அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்”கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார். |
19 | மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்தது, இல்லை “எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும். |
20 | அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார். என்றனர். |
21 | மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார். |
22 | ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “அவர் குரலுக்கு செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும் “ என்றார். |